தமிழ் காதல் கவிதைகள் – Love Quotes in Tamil with English Translation
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் என்பது இருவருக்கும் பொதுவானது. நமக்கு பிடித்தவர்கள் மேல் நாம் வைத்துள்ள அளவுக்கு அதிகமான அன்பின் பெயர் தான் காதல். இங்கே நாம் காதலை பற்றிய கவிதைகளையும் காதலர்களுக்குரிய மேற்கோள்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காண்போம்.
மேலும் பார்க்க : தீபாவளி வாழ்த்துக்கள்
கனவாக இருந்தாலும் கண் விழிக்க தோணவில்லை உன்னோடு வாழ்வதை நிஜம் என எண்ணி ..!
உன் கரம் சேர்ந்து விட்டேன் இனி வாழ்வில் இன்பமானாலும் துன்பமானாலும் அது உன்னோடு மட்டும் தான்
உன் அருகில் அமர்ந்திட தான் இருக்கைகள் கூட இடம்பிடித்து வைக்கிறது எனக்காக
என் வார்த்தைகள் கூட விடுமுறை எடுத்து கொள்கிறது உன்னோடு நான் பேச வரும் பொழுது
உலகத்துக்கு நம்மை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் நம்மை பிடித்த ஒருவருக்கு நாம் மட்டும் தான் உலகம்
கோபம் வந்தாலும் உடனே சண்டையிட்டு விட்டு Ego இல்லாமல் அடுத்த நிமிடமே பேசும் உறவுகள் அழகானது
நீ என்னோடு இல்லையென்றாலும் உன் நினைவுகள் என்னோடு இருந்தால் போதும் நான் உயிர் வாழ
உன்னை பார்ப்பது என் கண்களாக இருந்தாலும் உன்னை பார்க்க விரும்புவது என் இதயம் தான்