Tamil Bible Words for Travel
திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். யோசுவா 1:9
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121:8
என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். யாத்திராகமம் 33:14
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:6
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. ஏசாயா 43:2
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:6
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். செப்பனியா 3:17
பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. சங்கீதம் 121:6
இந்த வேத வசனங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை கர்த்தரின் வார்த்தைகளோடு அன்றாட பயணத்திற்கு உதவியதாக நம்புகிறோம். உங்களுக்கு தேவையான வேத வசனத்தை எடிட்டிங் செய்ய தொடர்புக்கு