அனைவருக்கும் இனிய ரோஜா தின வாழ்த்துக்கள்.
Related Searches
▶️ happy rose day kavithai in tamil ▶️ Happy Rose Day Wishes, quotes tamil ▶️ ரோஜா தின வாழ்த்துக்கள் ▶️ rose day quotes in tamil
ரோஜா தினம்
காதலர் வாரத்தின் முதல் நாள், அதாவது பிப்ரவரி 7 ரோஜா தினமாக உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் காதலருக்கு இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நாளாக கருதப்படுகிறது. ரோஜா தினத்தை காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டுமா என்றால் நிச்சயமாக இல்லை. நம் அன்பான நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் கொண்டாடலாம்.
ரோஜா என்பது காதலின் அன்பு பரிசு. இது காதலர்கள் தங்களை சந்திக்கும் போது அன்பிற்காக பகிரப்படுகிறது. ரோஜா என்பது அழகில் பெண்களுக்கு நிகரானது. ரோஜா தினத்தை பற்றிய கவிதைகளையும் வாழ்த்துக்களையும் இங்கே காணலாம்.
ரோஜா தின வாழ்த்துக்கள்
1. ரோஜாவோடு சேர்த்து என் இதயத்தையும் கொடுத்து விட்டேன் உன்னிடத்தில்
2. இன்றைய ரோஜா நாளைக்கு வாடலாம் ஆனால் இன்றைய என் அன்பு என்றைக்கும் வாடாது
3. ரோஜாவின் வாசனை போல நம் அன்பும் வாசனை வீச இனிய ரோஜா தின நல்வாழ்த்துக்கள் !

4. உன் அன்பும் ஒரு அழகான ரோஜா பூ போல ! தொடர்ந்து என் மீது உன் வாசம் வீசுவதாக !!
5. என் இதய பூந்தோட்டத்திலே பூத்திட்ட முதல் ரோஜா நீ
6. தோட்டத்தில் இருக்கும் ரோஜா எவ்வளவு அழகாக இருக்குமோ அது போல் தான் நீ என் வாழ்வில் இருப்பது Happy Rose Day

7. ரோஜாவுக்கு எப்போதும் அழகு குறையாது உன்னை அது பார்க்காத வரைக்கும் !
8. நீயே என் வாழ்க்கையின் ரோஜா, நீயின்றி எனக்கு வேறு சுவாசங்கள் இல்லை
9. உன்னை பார்க்கவே என் தோட்டத்தில் பூத்து குலுங்குகிறது ரோஜாக்கள் ரோஜா தின வாழ்த்துக்கள்

10. கைகளில் தாங்கி கொண்டிருந்த ரோஜாவை இனி இதயத்திலும் தாங்க நினைக்கிறேன்
11. ரோஜாவின் மணமும் உன்னுடைய மனமும் எப்போதுமே வாசம் வீசும்
12. பூக்களின் வாசனையை அறியாமலே போயிருந்தேன் உன் வாசனை என்னை தீண்டாத வரைக்கும் ! Happy Rose Day

Rose Day Quotes in Tamil
13. ரோஜாவை மட்டுமன்றி இதயத்தையும் ஒருவருக்காக கொடுப்பதே காதல்
14. ஆயிரம் ரோஜாக்கள் இருந்தாலும் உன் ஒருத்தியின் வாசனைக்கு ஈடாகாது
15. என்னுடைய வாழ்க்கையில் வாசனையை கொண்டு வந்த தேவதைக்கு இனிய ரோஜா தின நல்வாழ்த்துக்கள்

16. முட்களுக்கு நடுவில் இருந்தாலும் ரோஜாவின் அழகு குறையாது அது போல கஷ்டங்களுக்கு நடுவில் இருந்தாலும் உன் மீதுள்ள அன்பு குறையாது
17. ரோஜா மலரும் புன்னகைக்கும் என்பதை உணர்ந்தேன், நீ சிரித்திடும் பொழுது
18. அழகான பூவுக்கு நான் கொடுத்த அன்பு பரிசு இந்த ரோஜா இனிய ரோஜா தின வாழ்த்துக்கள்

19. வாசனை இல்லாத ரோஜாவை போல தான் இங்கு அன்பு இல்லாத உறவுகள்
20. உறவுகள் என்பது ரோஜா பூவின் இதழ்களை போல; ஒன்று உதிர்ந்தாலும் அதன் அழகு குறைந்து போகும்
21. பூக்களாக பிறந்தால் வாடிப் போக வேண்டுமென்று அவளை பூங்கொடியாக படைத்தான் இறைவன்

22. காதல் என்பது எப்போதும் வாட கூடாத ரோஜா. ஒரு முறை வாடி விட்டால் அதன் அழகு முடிந்து போகும்
23. ஒரு மலர் உதிர்ந்து விட்டால் ஆயிரம் மலர் பூக்கலாம் ஆனால் உன் மனம் போல் ஆகி விடாது
24. உன்னை விட அழகான ரோஜாவை எங்கும் நான் பார்த்ததில்லை Happy Rose Day

ரோஜா தினத்தின் முக்கியத்துவம்
இது காதலர்களுக்கும், நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் தங்கள் அன்பையும் வெளிப்படுத்தும் நாளாக இருக்கிறது
இந்த நாள் அன்பு மற்றும் பாசத்தை, ரோஜாவை பகிர்ந்து உறவுகளின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கிறது.

ரோஜாவின் வண்ணங்களும் அர்த்தங்களும்
எந்த வண்ண ரோஜாவை யாருக்கு பரிசளிக்கலாம். ஒவ்வொரு வண்ண ரோஜாவுக்கு வெவ்வேறு வகையான அர்த்தங்கள் உள்ளன.
சிவப்பு ரோஜா: இது காதலையும் ஒருவர் மீதுள்ள ஆசையையும் குறிக்கிறது. சிவப்பு ரோஜா காதலர்களுக்கும், திருமணமான தம்பதிகளுக்கு இடையே பகிரப்படுகிறது.
மஞ்சள் ரோஜா: இது நட்பையும் சந்தோஷத்தையும் குறிக்கிறது. மஞ்சள் ரோஜாவை நண்பர்கள் மற்றும் புதிதாக சந்திக்கும் ஒருவருக்கு வழங்கலாம்.
வெள்ளை ரோஜா: இது தூய்மையையும் உண்மையையும் குறிக்கிறது. வெள்ளை நிற ரோஜாவை நமக்கு உண்மையாக இருக்கும் அனைவருக்கும் கொடுக்கலாம்.
பிங்க் ரோஜா: இது நன்றியணர்வையும் பாராட்டையும் குறிக்கிறது. இதை நாம் மரியாதை நிமித்தம் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
நீங்க இதுல என்ன color கொடுக்க போறீங்க ?
பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
எங்களை தொடர்பு கொள்ள