காதல் பிரிவு கவிதைகள் – Breakup Quotes in Tamil

காதல் பிரிவு கவிதைகள் – Breakup Quotes in Tamil
Related Searches
▶️ பிரிவின் வலி கவிதைகள்
▶️ First love breakup Quotes In Tamil
▶️ Breakup kavithai tamil
▶️ Girl love breakup Quotes In tamil
▶️ Love breakup In Tamil

காதல் அழகானது தான் பிரிவு ஒன்றை சந்திக்காத வரை. காதலின் பிரிவுக்கு காரணம் காதலை, காதலிப்பவரை புரிந்துக் கொள்ளாமல் இருப்பது தான். பிரிவின் வலியை விட காதல் நினைவுகளின் வலியே கொடுமையானது. காதல் பிரிவினை பற்றிய மேற்கோள்களை இங்கே பார்க்கலாம்.

நேசிப்பவர் நமக்கு கொடுக்கும் வலியை தாங்கும் இதயத்தால் அவர்கள் பிரிவை தாங்க முடிவதில்லை

சிலருக்கு தெரிவதில்லை இதுதான் வாழ்வில் அவர்களை தான் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்பது

காரணம் இல்லாமல் நம்மை நேசித்த இதயம் இன்று காரணம் சொல்லி பிரிந்து செல்கிறது

இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நேசித்த ஒருவரின் பிரிவுக்கு பின்னர் தான் தெரிகிறது

எதையும் எதிர்பாராமல் நம்மை நேசித்த உறவு இன்று அவர்களை எதிர்பார்க்க வைத்து விட்டு சென்று விட்டது

பிடிக்காமல் நிராகரிப்பதை காட்டிலும் தன் பெற்றோரின் கண்ணீரை காண கூடாது என நிராகரிப்பவர்களே அதிகம்

Rubber band போல தான் உறவுகளும் அதிகமாக இழுத்து காயப்படுத்தினால் தானாக உடைந்து விடும்

சில விஷயங்களை இதுதான் வாழ்க்கை என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது

நான் பாசம் வைக்கிற யாரும் கடைசி வரைக்கும் என் கூட இருக்க மாட்டாங்க சீக்கிரமா என்னை விட்டு போய்டுவாங்க

ஆசைப்பட கூட பயமா இருக்கு நான் ஆசைப்படுற எதுவும் எப்போதும் எனக்கு கிடைத்தது இல்லை

பிடித்தவர்களுக்காக பிடித்ததை விட்டுக் கொடுத்தவர்கள் ஒருநாள் பிடித்தவர்களையும் விட்டு கொடுக்கின்றனர் பிடித்தவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப

நாம் யாருக்கு உண்மையாக இருக்கிறோமோ அவர்கள் யாரோ ஒருவருக்காக நம்மிடம் பொய்யாக நடிக்கிறார்கள்

ஒருவரை வாழ வைப்பதும் காதல் தான் வீழ வைப்பதும் காதல் தான்

நம்மை நேசிக்கும் இதயத்தை தவறவிட்டால் மீண்டும் கிடைப்பது கடினம்

Thank You For Teaching me A Valuable Lessons of Life

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்

Scroll to Top