ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் நம்மை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. அவை நமக்குள் இருக்கும் திறன், விடாமுயற்சியின் முக்கியத்துவம் மற்றும் பெரிய கனவுகளின் மதிப்பை நினைவூட்டுகின்றன. நாம் சவால்களை எதிர்கொண்டாலும், இலக்குகளைத் தொடரும்போதும், ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் நமது ஆர்வத்தையும் உந்துதலையும் மீண்டும் தூண்டுவதற்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். பின்வரும் தொகுப்பில், பல்வேறு சிந்தனையாளர்கள், தலைவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளை நீங்கள் காணலாம்.
ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்- Motivational Quotes in Tamil
1. தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் நாம் துணிந்து நிற்க வாய்ப்பு கிடைக்கும்
2. இன்று நாம் செய்யும் தவறுகள் தான் நாளை நமக்கு இருக்கும் அனுபவங்கள்
3. நடந்ததை ஏற்று கொள்ளும் மனம் இருந்தால் தான் தொடர்ந்து நடக்க முடியும் வாழ்க்கையில்
4. உன்னால் முடியும் என்று நம்பினாலே போதும். நீ கடக்க வேண்டிய தொலைவில் பாதியை அடைந்து விடுவாய்.
5. நாம் இன்று வாழும் வாழ்க்கை தான் பலர் இங்கே வாழ நினைக்கும் வாழ்க்கை

6. ஒரு கனவு நம்மை விட்டு போனாலும் இன்னொரு கனவு நம் கண்களுக்குள்ளே சுற்றி கொண்டிருக்கும்.
7. ஒரு வேலையை சரியாக செய்ய வேண்டுமானால் முதலில் செய்யும் வேலையை நேசிக்க வேண்டும்.
8. கவலையை தூக்கி சுமப்பவனால் மகிழ்ச்சியை நினைத்து வாழ முடியாது
9. அறிவு உங்களுக்கு ஆற்றலை கொடுக்கும்; ஆனால் குணம் மட்டுமே மரியாதையை கொடுக்கும்
10. தேடல் இருக்கும் வரைக்கும் நமக்கு வாய்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும்

11. கனவுகளை நம்புபவர்களுக்கு தான் அழகான எதிர்காலம் காத்திருக்கிறது
12. ஒரு கனவு நம்மை விட்டு போனாலும் இன்னொரு கனவு நம் கண்களுக்குள்ளே சுற்றி கொண்டிருக்கும்
13. தோல்வியால் கலையும் கனவுகளை விட நம்மால் முடியுமா என்ற சந்தேகத்தால் அழியும் கனவுகள் தான் அதிகம்
14. கீழ் தரமான மனிதர்களுக்கு பதில் சொல்லி நம்முடைய தரத்தை குறைத்துக் கொள்ள கூடாது
15. வாழ்க்கை என்பது நம்மை நாம் தேடுவது இல்லை; நம்மை நாமே உருவாக்குவது

Valuable Thoughts In Tamil
16. வார்த்தைகளால் பேசுவதை காட்டிலும் வாழ்ந்து காட்டுவதே சிறந்தது
17. உங்கள் மனதை மாற்ற முடிந்தால் தான் உங்கள் வாழ்க்கையையும் மாற்ற முடியும்
18. கடிகாரத்தை பார்க்காதே. அது என்ன செய்கிறது என்று பார். ஓடி கொண்டே இரு.
19. நீந்த கற்று கொள்ளாமல் கடலுக்குள் செல்ல கூடாது;
20. பெரிதான விஷயங்களை அடைய பெரிய ஆபத்துகளையும் சந்தித்து தான் ஆக வேண்டும்.

21. இருப்பது ஒரு வாழ்க்கை உனக்காக வாழ்ந்து விட்டு செல்
22. எல்லா திறமைகளை பெற்றவர்களும் இல்லை; எந்த திறமைகளும் இல்லாதவர்களும் இல்லை
23. புத்தகம் சேமித்து பயன் எதுவும் இல்லை; புத்தகத்தில் படித்ததை மனதில் சேமிக்க வேண்டும்.
24. நம்முடைய கால்களை சரியான இடத்தில் வைத்தால் தைரியமாக அடுத்த அடி எடுத்து வைக்கலாம்

25. பயந்தவனுக்கு வாழ்க்கை வலிகள் நிறைந்தது; துணிந்தவனுக்கு வாழ்க்கை வழிகள் நிறைந்தது
26. நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலைப்படாதே; நீ நடந்தால் அதுவே ஒரு பாதை
27. யாரையும் நம்பி வாழதே; உனக்கு நீ மட்டும் தான் என்று நினைத்துக் கொள்
28. எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் நம்மை தூக்கி விட்டவர்களை மறக்க கூடாது

29. மன வலிக்கு சிறந்த ஒரே மாற்று மருந்து உடல் வலி
30. இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும் ஆனால் வாழ ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்

Inspirational Quotes -Famous Quotes in Tamil
31. மிகச் சிறிய மனிதனால் கூட எதிர்காலத்தின் போக்கை மாற்ற முடியும். ~ஜே.ஆர்.ஆர் டோல்கீன்
32. உங்கள் குரலை அல்ல, உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள். பூக்களை வளர்ப்பது மழையே, இடி அல்ல. ~ரூமி
33. எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவதாகும். ~பீட்டர் ட்ரக்கர்
34. அமைதியாக இருப்பவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து விடாதே; பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி ~புத்தர்
35. குரைக்கும் ஒவ்வொரு நாயின் மீதும் கற்களை எறிந்தால் நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியாது. ~வின்ஸ்டன் சர்ச்சில்
36. இருளில் மூழ்குவதை விட மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது நல்லது. ~சீன பழமொழி

37. விதியால் நீங்கள் எதை இழந்தாலும், அது உங்களை வலியிலிருந்து காப்பாற்றியது என்பதில் உறுதியாக இருங்கள். ~ரூமி
38. எல்லாம் ஒரே நேரத்தில் நடக்காமல் இருப்பதற்கு நேரம் மட்டுமே காரணம். ~ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
39. கால் சறுக்கல் விரைவில் குணமடையலாம், ஆனால் நாக்கு நழுவினால் நீங்கள் ஒருபோதும் மீள முடியாது. ~பெஞ்சமின் பிராங்க்ளின்
40. திட்டம் சரியில்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள்; இலக்கை அல்ல ~ M S தோனி
41. ஒவ்வொரு முடிவிலும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. ~லிப்பா ப்ரே
42. இந்த உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும். ~காந்தி

வெற்றி மேற்கோள்கள் – Success Quotes in Tamil
43. தோற்ற இடத்தில் ஜெயித்தால் அதை விட பெரிய வெற்றி எதுவும் இல்லை
44. வெற்றி என்பது நம்மை தேடி வருவதில்லை; நாம் தினமும் தேடியதால் வருவது
45. தோல்வியில் இருந்து கிடைக்கும் வெற்றிக்கு தனி வரலாறு கிடைக்கும்
46. தன்னம்பிக்கையும் முயற்சியும் மட்டுமே வெற்றியின் படிக்கட்டு
47. வெற்றி என்பது மகிழ்ச்சிக்கு அடிப்படை இல்லை; மகிழ்ச்சி என்பதே வெற்றிக்கு அடிப்படை
48. சிறிய சிறிய முயற்சிகள் தான் பெரிய பெரிய சாதனைகளை உருவாக்கும்

49. வெற்றிக்கும் தோல்விக்கும் ஒரே வழி தான். முயற்சி என்பதே இரண்டையும் முடிவு செய்யும்.
50. வெற்றிக்காக கனவு கண்டால் மட்டும் போதாது; போராடவும் வேண்டும்
51. ஒரு நிமிட வெற்றி என்பது ஆயிரம் நிமிட தோல்விகளும் ஆயிரம் நிமிட முயற்சிகளும் நிறைந்தது
52. முடியாது என்று நீங்கள் சொல்லும் ஒவ்வொன்றையும் எங்கோ ஒருவர் செய்து கொண்டிருப்பார்
53. தோல்விகள் இல்லாத வெற்றி அனுபவமே இல்லாத தொழிலை போன்றது
54. தொழிலும் தொழில்கல்வியும் கற்று தராத பாடத்தை தோல்விகளும் அவமானமும் கற்று தரும்
55. வெற்றி மகிழ்ச்சியை தரும் என்றால் முயற்சி வெற்றியை தேடி தரும்
56. தவறுகளை ஏற்று கொள்பவனால் தான் வெற்றிகளை சொந்தமாக்கி கொள்ள முடியும்
57. பல முறை விழுவது தவறு இல்லை; விழுந்த பின்னர் எழாமல் இருப்பது தான் தவறு

Quotes About Successful Life
58. தோல்வியின் போது தலை சாயாதே; வெற்றியின் போது தலை கனத்தில் ஆடாதே
59. உனது பயிற்சி கடினமாக இருந்தால் மட்டுமே உனது வெற்றி எளிமையாக இருக்கும்
60. காயமில்லாமல் கனவுகள் காணலாம்; ஆனால் காயமில்லாமல் வெற்றி காண முடியாது
61. வெற்றிக்கு ரகசியங்கள் எதுவும் இல்லை; முயற்சியும் தன்னம்பிக்கையும் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கிறது
62. நேற்றைய தினத்தில் விழுந்ததை நினைத்தால் தான் இன்றய தினத்தில் விழாமல் நடக்க முடியும்
63. வெற்றி என்பது கிடைக்கும் வரை நம் முயற்சிகள் யாருக்கும் தெரிவதில்லை
64. வெற்றி என்பது இறுதி இலக்கல்ல; தோல்விகளில் இருந்து கிடைக்கும் அனுபவங்களே பெரியது
65. வெற்றி ஒரே நாளில் கிடைப்பதில்லை; ஒவ்வொரு நாளின் முயற்சியும் சிறு வெற்றி தான்

66. தோல்வி என்பது வெற்றிக்கான இன்னொரு வாய்ப்பு தான்
67. தோல்வியை பார்த்து அஞ்சாதவர்களுக்கு தான் வெற்றி என்பது கை கொடுக்கும்
68. வெற்றி என்ற ஏணியின் படிக்கட்டே அவமானங்களும், தோல்விகளும், முயற்சிகளும் தான்
69. தோல்வி என்பது ஒரு நிகழ்வு தான்; முடிவு அல்ல
70. வருத்தம் என்பது இன்றைய சந்தோசத்தை மட்டுமல்ல நாளைய நம்பிக்கையும் கெடுத்து விடும்
71. நாம் இடம் கொடுக்காமல் யாரும் நம்மை காயப்படுத்த முடியாது
72. எப்போதும் தோல்வியை சந்திக்க தயாராக இருங்கள்; வெற்றி உங்களை தேடி வரும்
73. கடைசி வரைக்கும் நம்பிக்கை ஒன்றை இழக்காதே; கடைசி வரிகளில் கூட உனக்கான வெற்றி எழுதப்பட்டு இருக்கலாம்
74. வெற்றி பெற வேண்டுமென்றால் தோல்வியை தாங்கும் மன நம்பிக்கையும் வேண்டும்
புன்னகை மேற்கோள்கள் – Smile quotes in Tamil
75. புன்னகையை உதிர்பவர்களை பார்க்க தினம் தினம் பூக்கள் பூக்க தான் செய்கிறது
76. ஒருவரை பார்த்தால் புன்னகையுங்கள்; நாளை அவர்களை பார்ப்பது கேள்வி குறி தான்
77. வாழ்க்கையில் புன்னகைக்க ஒரு வழி இருக்கும்; அதை தேடுவதிலே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கும்
78. உலகத்தில் பேச ஆயிரம் மொழிகள் இருந்தாலும், உலகெங்கும் புன்னகைக்கு ஒரே மொழி தான்.

79. புன்னகைக்காத நாள்கள் தான் வாழ்க்கையில் வீணாக கழிக்கப்பட்ட நாள்கள்
80. ஒருவரை காயப்படுத்தாத புன்னகை ஒருவருடைய மன காயத்திற்கு மருந்து
81. முகம் அழகாக இருக்க அழகுசாதன பொருள்கள் தான் வேண்டும் என்பதில்லை; புன்னகை இருந்தாலே போதும்
நேரம் கவிதைகள் – Time quotes in Tamil
82. பொறுமையாக காத்திரு; கடைசி நிமிடத்தில் மாறிய ஆட்டங்கள் கூட இங்கு உண்டு
83. என்றோ ஒரு நாள் தொடங்க தான் போகிறாய்; அதை இன்றே தொடங்கிவிட்டு போ
84. ஆட்டத்தின் ஒரு நிமிட மாற்றங்கள் கூட ஆட்டத்தின் முடிவையே மாற்றி விடும்

85. ஒன்றை இழக்கும் வரைக்கும் தெரியாமல் இருப்பது “நேரத்தின் அருமை”
86. சில சமயம் நினைவுகள் ஆகாத வரைக்கும் அந்த நேரத்தின் அருமை தெரிவதில்லை
87. நம்மால் வாழ்க்கையின் தொடக்கத்தை மாற்ற முடியா விட்டாலும் வாழ்க்கையின் முடிவை மாற்ற முடியும்
88. வாழ்க்கையின் சிறந்த நாள்களை அடைய சில மோசமான நாள்களை கடந்து தான் ஆக வேண்டும்

89. உனக்காக நேரத்திற்காக காத்திருக்காதே; கிடைத்த நேரத்தை உனக்கானதாக்கு
90. ஆட்டத்தின் முதல் பாதியை பற்றி கவலைப்படாதே; இன்னொரு பாதி இருக்கிறது அதை உன்னுடையதாக்கு
91. இன்றைய நிலையை பார்த்து எதையும் தீர்மானித்து விடாதே; காலமும் நேரமும் வருவதே மாறுவதற்கு தான்

92. விடியலை பார்க்க வேண்டுமென்றால் இரவெல்லாம் காத்திருக்க தான் வேண்டும்
93. என்றோ ஒரு நாளா ? இன்றைய நாளா ? என்பது நம் கைகளில் தான் உள்ளது
94. நேரத்தை வீணடிக்காதே; பின்னர் கடனாய் கூட வாங்க முடியாது

95. அதிகாலையில் நீ எழுந்து விட்டாலே போதும்; தோல்விகள் உன்னை விட்டு ஓட ஆரம்பித்து விடும்
96. நிம்மதியாக வாழ வேண்டுமானால் இழந்து போனதை நினைத்து வாழாமல் கடந்து போக வேண்டும்
97. உன்னுடைய எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. உன்னுடைய நிகழ்கால செயல்கள் தான் அதை தீர்மானிக்கும்

மகிழ்ச்சி கவிதைகள் – Happy Quotes in Tamil
98. ஒரு மெழுகுவர்த்தியால் ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஒளிர செய்ய முடியும்; மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்வதால் குறைவது இல்லை
99. தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்களால் தான் பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்
100. இந்த நிமிடத்தில் மகிழ்ச்சியாக இரு; இன்னொரு முறை இதே நிமிடம் திரும்ப வருவதில்லை
101. ஊர் சிரிக்கும் என்று நாம் வாழ்ந்தால் நாம் ஒரு போதும் சிரித்து வாழ முடியாது
102. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக தொடங்கினால் மகிழ்ச்சியாகவே முடியும்
நேர்மறை மேற்கோள்கள் – Positive quotes in Tamil
103. ஒவ்வொரு தடங்கல்களும் ஒவ்வொரு தொடக்கம்
104. எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால் நம் வாழ்க்கையும் நேர்மறையாக இருக்கும்
105. நேர்மறை எண்ணங்களோடு காத்திரு; நீ நினைத்த நாள்கள் வந்து கொண்டிருக்கிறது
106. காலையில் வானவில்லை பார்த்தாலும் நட்சத்திரங்களை இருட்டினில் தான் பார்க்க முடியும்
107. ஒவ்வொரு நாள் பொழுதும் நமக்கு கிடைத்த வரம் தான்
108. உன்னால் உச்சியை அடைய முடியாமல் போய் இருக்கலாம்; ஆனால் உன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு மேலே தான் இருக்கிறாய்
மேலும் படிக்க: ஊக்கமூட்டும் கவிதைகள் – Motivational Quotes in Tamil
Tags: Motivational Quotes in Tamil, நம்பிக்கை, ஊக்கம், மோட்டிவேஷன், Best Motivational Quotes in Tamil and English for students, Positive Tamil Quotes in one line, time quote in tamil, Motivation Kavithai in Tamil, வெற்றி தன்னம்பிக்கை வரிகள், தமிழ் மோட்டிவேஷனல் கவிதைகள், முயற்சி quotes in tamil